இலங்கையின் சிறந்த அரசியல் இராஜதந்திரியை நாம் இழந்து விட்டோம் - இரங்கல் செய்தியில் அங்கஜன் இராமநாதன் - Yarl Voice இலங்கையின் சிறந்த அரசியல் இராஜதந்திரியை நாம் இழந்து விட்டோம் - இரங்கல் செய்தியில் அங்கஜன் இராமநாதன் - Yarl Voice

இலங்கையின் சிறந்த அரசியல் இராஜதந்திரியை நாம் இழந்து விட்டோம் - இரங்கல் செய்தியில் அங்கஜன் இராமநாதன்இலங்கையின் சிறந்த அரசியல் இராஜதந்திரியை நாம் இழந்து விட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் கொவிட் தொற்றால் காலமடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது.

வெளியுறவு அமைச்சராக, நிதி அமைச்சராக, ஊடக அமைச்சராக தபால் தொலைத்தொடர்பு அமைச்சராக, துறைமுகங்கள் விமான போக்குவரத்து அமைச்சராக, கடந்த காலங்களில் அவர் இந்நாட்டுக்கு ஆற்றிய சேவைகளை மக்கள் என்றும் நினைவில் கொள்வார்கள்.

இளம் அரசியல்வாதிகளுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி ஊக்கப்படுத்தும் அவருடைய இழப்பானது இலங்கை அரசியல் பரப்புக்கு ஏற்பட்ட பெரும் வெற்றிடமாகும்.

எம்மோடு நட்போடும் அன்போடும் இருந்த பலரை கொவிட் தொற்றினால் நாளுக்கு நாள் இழந்து வருகின்றோம். இந்த சூழலை கருத்தில்கொண்டு மக்கள் அனைவரும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி உங்களையும் நாட்டையும் பாதுகாக்குமாறு வேண்டுகின்றேன்.

அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post