யாழிலுள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போவதாக மீனவர்கள் எச்சரிக்கை - Yarl Voice யாழிலுள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போவதாக மீனவர்கள் எச்சரிக்கை - Yarl Voice

யாழிலுள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போவதாக மீனவர்கள் எச்சரிக்கை




இந்திய இழுவைப் படகு எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்கத் தவறின் இயந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம் என வடமராட்சி மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

எல்லை தாண்டிய இந்திய இழுவை படகுகளால் தொடர் பாதிப்பு, பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் நாளாந்தம் இழப்பு. நேற்று (23) இரவும் பருத்தித்துறை கொட்டடி மீனவர்கள் பலரின் வலைகள் இழுவைப் படகுகளால் நாசமாக்கப்பட்டுள்ளது

இந்திய மீனவர்களது இரட்டை இழுவைமடிப்்படகுகள் எல்லை தாண்டி மீன்பிடியை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறின் இயந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம் என்று வடமராட்சி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

தமது வலைகள் இலட்சக் கணக்கில் வெட்டி நாசம் செய்யப்படுவதை எது வரை பாரத்து பொறுத்திருக்க முடியும்? என மீனவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

நீரியள் வளத்துறை அமைச்சர் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறார், உங்களால் இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்த முடியாது போனால் எங்களிடம் சொல்லுங்கள் நாங்கள் இழுத்து வந்து கொழும்துவோம்.

நேற்று இரவும் பருத்தித்துறை கொட்டடி மீனவர்கள் பலரின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளை இந்திய இழுவைப்படகுகள் அறுத்து நாசம் செய்துள்ளது, அறுத்து நாசம் செய்யப்பட்டு எஞ்சிய வலைகளுடன் கரையை வந்தடைந்துள்ளனர்.

வடமராட்சி கடற் பிரதேசத்தில் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளை தொடர்ந்தும் இழந்து வருவதாகவும் இதனாலே தாம் தொடர் போராட்டங்களுக்கு தயாராவதாக வடமராட்சி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

பல வருடங்களாக இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி நாளாந்தம் வடமராட்சி கடற்பரப்பில் இழுவை மடி தொழிலில் ஈடுபடுவதால் கடல் வழங்கள் அழிக்கப்படுவதுடன் வடமராட்சி பிரதேச மீனவர்களின் வலைகளும் நாசாமாகி வருகின்றன

இது தொடர்பில் கடற்றொழில் அமைச்சரிடம் பல தடவைகள் முறையீடு செய்தும் எந்தவித பயனும் கிடைக்கவில்லை எனவும், பொலீஸ் நிலத்தில் முறைப்பாடு செய்து முறைப்பாட்டுத் துண்டை தருமாறும் அமைச்சர் தெரிவித்து பல முறைப்பாட்டு துண்டுகள் கொடுக்கப்பட்டும்  எந்த இழப்பீடும் இல்லை.

கரையில் இருந்து சுமார் மூன்று கடல் மைல் தூரம் வரை இந்தியன் இழுவைமடி படகுகள் வருவதாகவும், கடற்படையும் பலதடவைகள் அவர்களை விரட்டியும் மீண்டும் மீண்டும் அவர்கள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

 மீனவர்கள், கடற்றொழில் அமைச்சர், மற்றும் கடற்படை அனுமதியளித்தால் எல்லை தாண்டிய இழுவை மடி படகுகளை தாம் கைப்பற்றி உரிய தரிப்புக்களிடம் ஒப்படைப்பதாகவும் தெரிவிக்கும் அவர்கள், தாம் பல இலட்சம் வங்கிகளில் கடன் பெற்று வலைகளை கொள்வனவு செய்து தொழிலில் ஈடுபடும் தாம் நாளாந்தம் இவ்வாறு வலைகளை இழந்து வருவதானால் பொருளாதார ரீதியாக தமது குடும்பம் வீதிக்கு வந்துள்ளது என்கின்றனர்.

வலைகள் சேதம் தொடர்பாக பல தடவைகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை செய்தாலும் நட்ட ஈடு எதுவும் இதுவரை கிடைக்கவில்லை, அதனால் இப்போது முறைப்பாடுகள் செய்யாமல் விட்டுவிட்டோம்.

இந்திய இழுவைப் படகுகளின் அட்டூழியத்தால் பயத்தின் காரணத்தால்  தொழிலிற்க்கு செல்லாது கரையில் படகுகளை கட்டப்பட்டுள்ளதாகவும் தமது துயரம் எப்போது தீரும் என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post