சந்தையில் நிலவிய காஸ் தட்டுப்பாட்டு நாளை முதல் வழமைக்கு திரும்பும் - அமைச்சர் வசந்த தெரிவிப்பு - Yarl Voice சந்தையில் நிலவிய காஸ் தட்டுப்பாட்டு நாளை முதல் வழமைக்கு திரும்பும் - அமைச்சர் வசந்த தெரிவிப்பு - Yarl Voice

சந்தையில் நிலவிய காஸ் தட்டுப்பாட்டு நாளை முதல் வழமைக்கு திரும்பும் - அமைச்சர் வசந்த தெரிவிப்பு எதிர்காலத்தில் எவ்விதமான தட்டுப்பாடுகளும் இன்றி காஸ் விநியோகிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், லாப் நிறுவனம், லிற்றோ  நிறுவனங்களுக்கும் கடந்த 21ஆம் திகதியன்று    கண்காணிப்பு விஜயங்களை மேற்கொண்டு கலந்துரையாடியுள்ளார்.

லாப் நிறுவனம், தன்னுடைய உற்பத்தியை நிறுத்தியமையால், உள்ளூர் சந்தைகளில் கடந்தவாரம்  காஸூக்கு கடுமையான தட்டுப்பாடு  நிலவியது.

லிற்றோ நிறுவனம் பழைய விலைக்கே காஸ் விநியோகத்தை தொடர்ந்தும் முன்னெடுத்தது. இந்நிலையில், லாப் நிறுவனம் புதிய விலைக்கு காஸ் விநியோகத்தை கடந்த 20ஆம் திகதி முதல் ஆரம்பித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post