கர்ப்பிணித் தாய்மார்களுக்காக ஒருவாரம் தடுப்பூசி வாரமாக அறிவிப்பு - Yarl Voice கர்ப்பிணித் தாய்மார்களுக்காக ஒருவாரம் தடுப்பூசி வாரமாக அறிவிப்பு - Yarl Voice

கர்ப்பிணித் தாய்மார்களுக்காக ஒருவாரம் தடுப்பூசி வாரமாக அறிவிப்பு



கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்து வதற்காக ஒரு வாரம் தடுப்பூசி வாரம் அறிவிக்கப்பட்டு உள்ளதாகக் கொழும்பு காசல்வீதி மகளிர் வைத்தியசாலையின் மகப்பேற்று மற்றும் நரம்பியல் விசேட வைத்திய நிபுணர் சனத் லெனரோல் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை செலுத்த சுகாதார அமைச்சின் அனுசரணையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப் பூசி செலுத்த சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியது.

நாட்டில் சுமார் 3,30,000 கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளனர் என்றும் அவர்களில் 200,000 க்கும் மேற்பட்டோருக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் கர்ப்பிணி தாய்மார் களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என வைத்திய பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது என்றும் பைசர் , மொடோனா மற்றும் சைனோபாம் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றது என்று சுகாதாரத் துறை ஏற்கனவே பரிந்துரைத் துள்ளதாகவும் வைத்திய நிபுணர் சனத் லெனரோல் தெரி வித்துள்ளார்.

கொரோனா தொற்றால் இதுவரை 20 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post