கொரோனா தடுப்பூசி செலுத்திய அட்டையை தேசிய அடையாள அட்டை போன்று கட்டாயமாக்கப்படும் - அஜித் ரோஹன - Yarl Voice கொரோனா தடுப்பூசி செலுத்திய அட்டையை தேசிய அடையாள அட்டை போன்று கட்டாயமாக்கப்படும் - அஜித் ரோஹன - Yarl Voice

கொரோனா தடுப்பூசி செலுத்திய அட்டையை தேசிய அடையாள அட்டை போன்று கட்டாயமாக்கப்படும் - அஜித் ரோஹன
எதிர்காலத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க கொரோனா தடுப்பூசி செலுத்திய அட்டை கட்டாயமாகத் தேவைப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்த மறுப்பவர்கள் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டை தவிர சகலரும் கொரோான தடுப் பூசி செலுத்தியமைக்கான அட்டை உடன் வைத்திருப்பது எதிர் காலத்தில் மிக முக்கியமானதாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தடுப்பூசியைச் செலுத்த மறுப்போர் குறித்து பொது சுகாதார அதிகாரிகளுக்கும் மற்றும் பொலிஸாருக்கு அறிவிக் குமாறு அஜித் ரோகண கேட்டுக்கொண்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post