கொரோனா அச்சுறுத்தல்: சந்நிதியான் ஆச்சிரமம் மூடப்பட்டது - Yarl Voice கொரோனா அச்சுறுத்தல்: சந்நிதியான் ஆச்சிரமம் மூடப்பட்டது - Yarl Voice

கொரோனா அச்சுறுத்தல்: சந்நிதியான் ஆச்சிரமம் மூடப்பட்டதுகொரோனா சட்டத்திட்டங்களை மீறி அதிக எண்ணிக்கையானோருக்கு அன்னதானம் வழங்கியமையினால் யாழ்ப்பாணம்- சந்நிதியான் ஆச்சிரமம் மூடப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் அந்தப் பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால், இன்று பிற்பகல் அறிவித்தல் ஒட்டப்பட்டு மூடப்பட்டது.

மேலும் ஆலயப் பகுதிகளிலுள்ள கடைகளில் உள்ளோர் பி.சி.ஆர்.பரிசோதனை எடுக்கும் வரை வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்திநிதி ஆலயம் வருடாந்திர பெருந்திருவிழா, நாளைமறுதினம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post