தொடர்ந்து அச்சுறுத்திவரும் கொவிட் இடர்காலத்தில் துன்பப்படும் உறவுகளுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது
உலகெங்கும் வேகமாக பரவி உயிர்களை காவுகொள்ளும் கொரோனா என்கின்ற கொடிய நோய்த்தாக்கத்தின் காரணமாக இலங்கையில் ஏற்பட்டு இருக்கும் அவசர கால நிலமையில் தமிழர் தேசத்தில் மிகவும் பாதிப்புற்று இருக்கும் எம்மவர்களுக்கு பல புலம்பெயர் உறவுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
அந்தவகையில் கனடாவைச் சேர்ந்த மானிப்பாய் இந்துக் கல்லூரி மானிப்பாய் மகளீர் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர்களின் நிதிப்பங்ளிப்பில் மானிப்பாய், சுதுமலை, நவாலி, சண்டிலிப்பாய் ஆகிய பகுதிகளில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு இவை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு 239குடும்பங்களுக்கு ஒவ்வொன்றும் 2700 பெறுமதியிலான நிவாரண பொதிகள் 15.08.2021 மானிப்பாய் பிரதேச சபை கலாசாரமண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் வலி.தென்.மேற்கு மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன், முன்னாள் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் க.உஷாந்தன், மானிப்பாய் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்க தலைவர் ஜெ.வீரசிங்கம், உபதலைவர் ச.ஶ்ரீகாந்தன், மானிப்பாய் மேற்கு கிராமசேவகர் பு.நிரூபன் உள்ளிட்ட பழையமாணவர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு உதவிப்பொருட்களை வழங்கி வைத்தனர்.
புலம்பெயர் தேசத்தில் வசித்தாலும் எமது ஊரையும் உறவுகளையும் மறக்காமல் இடர்காலத்தில் மக்களுக்கு உதவியிமைக்கு பயன்பெற்றவர்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
Post a Comment