யாழில் தடைகளை தாண்டி ஆசிரியர்கள் வாகனப் பேரணி - Yarl Voice யாழில் தடைகளை தாண்டி ஆசிரியர்கள் வாகனப் பேரணி - Yarl Voice

யாழில் தடைகளை தாண்டி ஆசிரியர்கள் வாகனப் பேரணி
போலீசார் , சுகாதாரப் பிரிவினரின் தடைகளைத் தாண்டி இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் யாழ் நகரில் வாகன பேரணி முன்னெடுப்பு.


24 வருட அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்கு, கொத்தலாவல சட்டமூலத்தை கிழித்தெறி, இலவச கல்விக்கான நெருக்கடிகளை நீக்கு
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நாடுபராகவும்
இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யாழ் நகரில் வாகன பேரணி ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது

யாழ்ப்பாணம் முற்றவெளியில் இருந்து ஆரம்பித்து யாழ்  நகர வீதி வழியாக யாழ் மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது குறித்த வாகன பேரணி நிறைவுபெற்றது.

வாகன பேரணியானது ஆரம்பமாகி நகரை அடைந்த போது போலீசார் மற்றும் சுகாதாரப் பிரிவினர் குறித்த பேரணி  நடாத்த முடியாது என தடுத்து நிறுத்த முட்பட்டனர்.

வாகன பேரணியில் சென்று தான் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளி பேணி தொடர்ந்து செல்வதாக  தெரிவித்து குறித்த வாகன பேரணி தொடர்ந்த்து. 

போரணியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post