வவுனியா பல்கலைக்கழக ஆரம்ப நிகழ்வு பிற்போடல் - Yarl Voice வவுனியா பல்கலைக்கழக ஆரம்ப நிகழ்வு பிற்போடல் - Yarl Voice

வவுனியா பல்கலைக்கழக ஆரம்ப நிகழ்வு பிற்போடல்
வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம்ப விழா கொரோனாப் பெருந்தொற்று அபாயம் காரணமாக பிற்போடப்பட்டுள்ளது. நாட்டில் எழுந்துள்ள கொரோனாப் பெருந்தொற்றுப் பரவல் காரணமாக, அரசாங்க நிகழ்வுகள், விழாக்கள் எதனையும் நடாத்த வேண்டாம் என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந் நிகழ்வு பிற்போடப்பட்டிருப்பதாக வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி த. மங்களேஸ்வரன் அறிவித்துள்ளார்.  

நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக ஆரம்ப நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாகவும், நிகழ்வுக்கான புதிய திகதி பற்றிப் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் வவுனியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் கலாநிதி த. மங்களேஸ்வரன் அழைக்கப்பட்டவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார். 

எதிர்வரும் 11 ஆம் திகதி, புதன்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தலைமையில் பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழக வளாகத்தில் இந்த நிகழ்வு   நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  

0/Post a Comment/Comments

Previous Post Next Post