யாழில் மேலும் ஜந்து பேர் கொரோனாவால் உயிரிழப்பு - Yarl Voice யாழில் மேலும் ஜந்து பேர் கொரோனாவால் உயிரிழப்பு - Yarl Voice

யாழில் மேலும் ஜந்து பேர் கொரோனாவால் உயிரிழப்புயாழ். மாவட்டத்தில் இன்று கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

இன்று மாலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவரும் வல்வெட்டித்துறையில் வீட்டில் ஒருவரும் என இருவர் உயிரிழந்துள்ளனர்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த செம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தார்.

அதேவேளை, வல்வெட்டித்துறையில் 81 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்தார் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக யாழ்.போதனாவில் ஒரு பெண் உயிரிழந்திருந்தார். அவருக்கு பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

காலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர், யாழ்.போதனாவில் சிகிச்சைபெற்றுவந்த ஒருவர் என தென்மராட்சியின் எழுதுமட்டுவாழ், கொடிகாமம் பகுதிகளைச் சேர்ந்த இருவர் உயிரிழந்திருந்தனர்.

யாழ்.குடாநாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post