மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு-2! செம அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்! என்ன அப்டேட் தெரியுமா! - Yarl Voice மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு-2! செம அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்! என்ன அப்டேட் தெரியுமா! - Yarl Voice

மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு-2! செம அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்! என்ன அப்டேட் தெரியுமா!




2016-ல் இயக்குனர் பாலா தயாரிப்பில், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் திரைப்பட விமர்சகர்கள்  மத்தியில்  நல்ல விமர்சனங்களை பெற்றது.

பிசாசு முதலாம் பாகத்தின் வெற்றியைத்தொடர்ந்து ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிக்கும் ‘பிசாசு 2’ திரைப்படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்குகின்றார்.

 கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க உடன் பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

திண்டுக்கல்லில் 3 கட்டமாக நடைபெற்ற ‘பிசாசு 2’ படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து இயக்குனர் மிஷ்கின் அனைவரின் ஒத்துழைப்பிற்கு தனது அன்பை தெரிவித்து வாழ்த்துக்களை கூறினார்.

பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்க சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். திரையரங்குகளில் ‘பிசாசு 2’ வெளியாகும் என்று கூறிய தயாரிப்பு தரப்பு விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post