யாழில் கடந்த 24 மணிநேரத்தில் 286 தொற்றாளர்கள் அடையாளம்! - Yarl Voice யாழில் கடந்த 24 மணிநேரத்தில் 286 தொற்றாளர்கள் அடையாளம்! - Yarl Voice

யாழில் கடந்த 24 மணிநேரத்தில் 286 தொற்றாளர்கள் அடையாளம்!யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று மாலை 4 மணிவரையான கடந்த 24 மணிநேரத்தில் 286 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அறிக்கையிடப்பட்டுள்ளது.

அவர்களில் 16 பேர் பிசிஆர் பரிசோதனையிலும் 270 பேர் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையிலும் கண்டறியப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 85 பேரும் யாழ்ப்பாணம் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 48 பேரும் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 14 பேரும்  சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 19 பேரும் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 41 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காரைநகரில் 9 பேரும் நல்லூரில் 14 பேரும் சண்டிலிப்பாயில் 8 பேரும் உடுவிலில் 11 பேரும் தெல்லிப்பழையில் 2 பேரும் பருத்தித்துறையில் 28 பேரும் மருதங்கேணியில் 4 பேரும் ஊர்காவற்றுறையில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2020 மார்ச்சிலிருந்து இன்று மாலை வரை 12 ஆயிரத்து 746 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் ஆயிரத்து 161 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 739 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post