அப்பா மகனுக்கு இடையில் கடவுளாலும் ‘நோ எண்ட்ரி’ போட முடியாது என இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆரம்பித்த விஜய் மக்கள் இயக்கம் தான் கலைக்கப்பட்டுள்ளதாகவும், நடிகர் விஜய் தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சமீபத்தில் விஜய்யின் அம்மா ஷோபாவும், அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும் விஜய் வீட்டுக்கு முன்னால் காரில் காத்திருந்ததாகவும், அப்போது அவர் அம்மாவை மட்டும் உள்ளே வரச் சொன்னதாகவும். பிறகு அவர்கள் அங்கிருந்து மணக்கசப்புடன் கிளம்பி வந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. இது சமூக வலைதளங்களில் படு வைரலானது.
இந்நிலையில் இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதில், “வணக்கம், இன்று வார இதழ் ஒன்றில் என்னுடைய பேட்டி வெளியாகியுள்ளது. நான் கூறிய அனைத்தும் அந்த பேட்டியில் இடம்பெற்றுள்ளது. நான் எப்போதுமே வெளிப்படையாகப் பேசுபவன். அந்த வார இதழில் என்னுடைய படம் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டது.
அனைத்துக்கும் நான் வெளிப்படையான பதில்களைக் கொடுத்துள்ளேன். அதே போல் என்னுடைய குடும்பத்தைப் பற்றி கேட்கும் போது தவறான கருத்து ஒன்று வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால் நானும் ஷோபாவும் விஜய் வீட்டிற்கு வெளியே காரில் காத்திருந்ததாகவும், அவர் அம்மாவை மட்டும் உள்ளே வரச் சொன்னதாகவும், மேலும் நாங்கள் இருவரும் அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டதாகவும் ஒரு செய்தி வெளியானது.
அந்த செய்தி தவறானது, உண்மை இல்லை என்பதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எனக்கும் விஜய்க்கும் பல பிரச்சனைகள் உள்ளது.
ஆனால் விஜய் மற்றும் அவரது தாய் இடையில் எவ்வித மனக்கசப்பும் இல்லை என்பதை இந்த வீடியோ மூலம் தெளிவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன்” என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.
Post a Comment