மத்திய வங்கி இன்று காலியாக உள்ளது! 2 பில்லியன் கூட இல்லை - ரணில் - Yarl Voice மத்திய வங்கி இன்று காலியாக உள்ளது! 2 பில்லியன் கூட இல்லை - ரணில் - Yarl Voice

மத்திய வங்கி இன்று காலியாக உள்ளது! 2 பில்லியன் கூட இல்லை - ரணில்மக்களுக்கு நாட்டின் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பாராளும ன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என அவர் தெரிவித் துள்ளார்.

எதிர்வரும் 2030 ஆம், 2035 ஆம் ஆண்டளவில் ஓய்வூதியத்தைச் செலுத்த முடியாமல் போகும். அதனைக் கவனத்தில் கொண்டு நாம் பணியாற்ற வேண்டும்.

நாடு நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்ட பொருளா தாரத்தை நம்பியுள்ளது. எமது தொழிற் சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்கள் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

எப்படி இவற்றை தற்போது நிறுத்துவது. சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று நிதியைப் பெறுங்கள். இலங்கை மத்திய வங்கியில் எதுவும் இல்லை.

மத்திய வங்கி இன்று காலியாக உள்ளது. 2 பில்லியன் கூட இல்லை என்று நினைக்கிறேன். பங்களாதேஷிலிருந்து கொஞ்சம் பணம் வாங்குகின்றனர்.

 இந்தியாவிடம் பெற்றுக் கொண்டு அங் குமிங்கும் பணத்தை பெறுவதில் பயனில்லை. இது சரிபட்டு வராது. வங்கி நன்றாக இருந்தால், ஏன் முன்னாள் ஆளுநரை வைத்திருக்கவில்லை என ரணில் கேள்வி எழுப்பியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post