வடக்கு, கிழக்கில் கொரோனா தொற்றுப் பரவல் மோசமாக இருக்கின்றது. தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரண எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பொது மக்கள் வெளியில் நடமாடாது மிகவும் அவதானத்துடன் இருந்தால் மாத்திரமே இந்தத் தொற்றுப் பரவல் முடிவுக்கு வரும்.
இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ அறிவுறுத்தினார்.
வடக்கு, கிழக்கு கொரோனா நிலைவரம் தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் நோய்க்காவிகள் பொது மக்களே. எனவே, பொதுமக்கள் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மதிக்க வேண்டும்.
பொதுமக்களே ஏதேனும் அத்தியாவசியத் தேவைகள் இருந்தால் மட்டும் வீடு
களிலிருந்து வெளியேறுங்கள். இதன் போது வீதிச் சோதனைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கு நீங்கள் பயணிப்பதற்கான காரணத்தைக் கூற வேண்டியது அவசியம்.
போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி பயணிப்பவர்களும் உள்ளனர்.
எனவே, இவ்வாறானவர்களை இனங்காண்பதற்காகப் பொலிஸார் பல
கேள்விகளைக் கேட்பர். எனவே, அதற்கான ஒத்துழைப்பை பொலிஸாருக்கு வழங்கிச் செயற்படுமாறு வடக்கு, கிழக்கு மக்களைக் கோருகிறேன்” என்றார்.
Post a Comment