தலிபானின் சிரேஸ் உறுப்பினரை பேட்டி கண்ட ஆப்கானின் பெண் பத்திரிகையாளரும் ஆப்கானிலிருந்து தப்பிவெளியேறியுள்ளார்.
டொலொ நியுசினை சேர்ந்த பெஹெஸ்லா அர்கன்ட் ஆகஸ்ட் 17ம் திகதி தலிபான் உறுப்பினரை பேட்டி கண்டிருந்தார்.
தலிபான் காபுலை கைப்பற்றி இரண்டுநாட்களின் பின்னர் அவர் தலிபானின் சிரேஸ்ட தலைவர் ஒருவரை பேட்டி கண்டிருந்தார்.
தலிபானின் எதிர்கால திட்டங்கள் அவர்கள் வீடுவீடாக சோதனைகளில் ஈடுபடுவது போன்றவை குறித்து அவர் அச்சமின்றி கேள்வி எழுப்பினார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த பேட்டி குறித்து கருத்து தெரிவித்த அவர் ஆப்கான் பெண்களிற்காக அதனை செய்தேன் என தெரிவித்தார்.
ஆப்கான் ஊடகமொன்றில் பெண்செய்தியாளர் ஒருவர் தலிபானின் உறுப்பினர் ஒருவரை பேட்டி கண்டது அதுவே முதல் தடவை.
இதன் பின்னர் அவர் மலாலா யூசுப்சாயினை அவர் பேட்டி கண்டார்.
ஆப்கானின் மில்லியன் கணக்கான மக்களை போல நான் தலிபான்கள் குறித்து அச்சமடைந்துள்ளதால் ஆப்கானிலிருந்து தப்பி வந்தேன் என அவர் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.
பெஹெஸ்டா அர்ஹலான்ட் காபுல் பல்கலைகழகத்தில் ஊடகம்பயின்றவர், பல ஊடகங்களில் பணியாற்றிய பின்னர் அவர் இந்தவருடம் டொலொ நியுசில் இணைந்தார்.
பல ஊடகவியலாளர்கள் தப்பிஓடிவிட்டனர்,என அந்த நிறுவனத்தின் பிரதமநிறைவேற்று அதிகாரி சாட்மொஹ்செனி தெரிவித்துள்ளார்.
நிலைமை மாறினால் நான் மீண்டும் காபுல் திரும்புவேன் என அவர் தெரிவித்துள்ளார்,எனக்கு அச்சுறுத்தல் இல்லாவிட்டால் நான் எனது நாட்டிற்கு திரும்பிச்சென்று எனது மக்களிற்காக பணியாற்றுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment