ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர் திருமண வைபவங்களை நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை! - Yarl Voice ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர் திருமண வைபவங்களை நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை! - Yarl Voice

ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர் திருமண வைபவங்களை நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை!இலங்கையில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் திருமண வைபவங்களை நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

மேல் மாகாணத்தின் சிறியளவிலான திருமணங்களை நடத்தும் சங்கங்கள் கோரிக்கையை விடுத்துள்ளன.

நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் சங்கத்தின் தலைவர் சுமித் ரங்கன இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதுள்ள நிலையில் சிறிய மக்கள் கூட்டத்துடன் திருமணங்களை நடத்த அனுமதி வழங்குமாறு கொவிட் குழுவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே போல் திருமணத்திற்கு வருபவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியிருக்க வேண்டும்.

 அவ்வாறான சட்டங்களை விதித்து திருமணங்களை நடத்த அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் திருமண நிகழ்வுகளில் மதுபானத்திற்கும் தடை விதிக்க வேண்டும்.

விசேடமாக குடும்பத்தினர் மாத்திரம் இணைந்துக் கொள்வதற்குச் சந்தர்ப்பம் வழங்குமாறு சங்கத்தின் தலைவர் சுமித் ரங்கன கேட்டுக்கொண்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post