கொவிட் -19 தொற்றுக்காக வைத்திய சாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையான ஒட்சிசனை கண்காணிக்கவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு பற்றாக்குறையின்றி ஒட்சிசனை விநியோகிக்கவும் , ஒட்சிசன் விநியோகிகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் தாமதமின்றி தொழில்நுட்ப முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் மருத்துவ தர ஒட்சிசனுக்கான தேவையானது அதிகரித்துள்ளதாகவும், அதனை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நாளாந்த மருத்துவ தர ஒட்சிசனுக்கான தேவையானது 80 தொன்களாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும் கொரோனா தொற்றுக்கு முன்னர் நாட்டினது நாளாந்த மருத்துவ தர ஒட்சிசனுக்கான தேவையானது 20 - 25 தொன்களாகவே இருந்துள்ளது.
வாராந்த அடிப்படையில் மருத்துவ தர ஒட்சிசனை இறக்குமதி செய்ய அரசாங்கமானது முடிவு செய்துள்ளது.
Post a Comment