தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை திங்கட்கிழமைக்கு பின்னர் நீடிப்பது குறித்து நாளை முடிவு செய்யப்படவுள்ளது.
கொவிட் 19 தொடர்பான செயலணியினால் இது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான வைத்தியர். அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
செயலணி நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளது.
இத்தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது கடந்த 20 ஆம் நள்ளிரவு முதல் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment