வெளிவிவகார அமைச்சரை சந்திப்பதற்கு முன்வைத்தார் மல்கம் ரஞ்சித் - Yarl Voice வெளிவிவகார அமைச்சரை சந்திப்பதற்கு முன்வைத்தார் மல்கம் ரஞ்சித் - Yarl Voice

வெளிவிவகார அமைச்சரை சந்திப்பதற்கு முன்வைத்தார் மல்கம் ரஞ்சித்




உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் தான் ஜி.எல்.பீரிஸை  சந்திக்க தாயார் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை விளக்குவதற்கு வெளிவிவகார அமைச்சர் பேராசி ரியர் ஜி.எல்.பீரிஸ் விடுத்த அழைப்பை ஏற்க சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் வெளிப்படையான முறையில் இடம்பெறுகிறது என நம்புவதாகவும் ஜி.எல்.பீரிஸ்க்கு கடிதமொன்றை அனுப்பியிருந்ததாகவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அந்த நம்பிக்கையைக் கட்டியெழுப்ப உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் முன் வைத்துள்ள இறுதி அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என்றும் அமைச்சருக்கு அனுப்பிவைத்துள்ள அந்த கடிதத்தில் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post