மக்களுக்கு நிர்ணயித்த விலையில் பொருட்களை பெற்றுக் கொடுக்க இரானுவம் களத்தில்! - Yarl Voice மக்களுக்கு நிர்ணயித்த விலையில் பொருட்களை பெற்றுக் கொடுக்க இரானுவம் களத்தில்! - Yarl Voice

மக்களுக்கு நிர்ணயித்த விலையில் பொருட்களை பெற்றுக் கொடுக்க இரானுவம் களத்தில்!




இன்றைய காலகட்டத்தில் இலங்கையினுடைய சந்தை விபரத்தை பார்த்தோமேயானால் அனைத்து பொருட்களிற்கும் அதிக விலையேற்றத்தை அவதானிக்க முடிகின்றது.

இதற்கான உண்மையான காரனமாக கறுப்புச் சந்தை (Black Market) காணப்படுவதை மறுக்க முடியாது.

அனைத்துப் பொருட்களும் நேரடியாக அல்லாமல் மறைமுகமாக கறுப்புச் சந்தையூடாக (Black Market) மக்களுக்கு விற்பனை செய்யப்படுவதே இதற்கான அடிப்படைக் காரனமாக அமைகின்றது.

இலங்கையில் சில பொருட்களின் இறக்குமதி தட்டுப்பாட்டினால் பதுக்கி வைத்து கறுப்புச் சந்தையில் (Black Market) விற்பனை செய்யப்படுகின்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

உதாரணமாக பார்ப்போமேயானால் பால் மா, சீனி, கேஸ் மற்றும் அரிசி போன்றவை பதுக்கி வைக்கப்பட்டதாக ஊடகங்களினூடாக அறிகின்றோம். இவையே கருப்புச்சந்தையில் (Black Market) அதிக விலையில் விற்பனையாகின்றது என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இவ்வாறே இன்று டொலர் ஒரு விற்பனைப் பொருளாக மாறியுள்ளது. அரசாங்கத்தின் அறிக்கையின் பிரகாரம் டொலரொன்றின் பெறுமானம் 204/- ஆக இருக்கின்றபோது கருப்புச்சந்தையில் 230/- ற்க்கும் அதிகமாக டொலர் விற்பனை செய்யப்படுவதாகவும் அறியமுடிகிறது. இதனடிப்படையில் இலங்கைக்கு பொருட்கள் கடத்துவதை தாண்டி டொலர்கள் முந்திக் கொண்டிருக்கின்றது என்பதையும் கணிக்க முடிகின்றது.

இவ்வாறான செயற்பாட்டை  கட்டுப்படுத்தும் நோக்கிலே அரசாங்கம் பொருட்களிற்கான நிர்ணய விலையினை வர்த்தமானியூடாக அறிவித்திருந்தும் நிர்ணய விலையில் பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது.

இவ்வாறு பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்கின்ற இடைத் தரகர்களுக்கெதிரான நடவடிக்கை உரிய தரப்பினரால் மேற்கொள்ளப்படாதவிடத்து விலையேற்றத்தை தடுக்க முடியாது.

எனவே மக்களின் தேவையை நிறைவேற்றும் பொருட்டு அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு பொருட்களைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையை அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும்.

ஆகவே இதற்கு இலைங்கை இராவனத்தினரையும் முப்படையினரையும் பயன்படுத்தி இந்த அரசாங்கம் இவ்விடையத்தை நிவர்த்திக்க முடியாமை கவைலையானதொரு விடையமாகவே இருக்கின்றது.

இன்றைய காலகட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, நாட்டின் அபிவிருத்தி விடையங்கள் கண்கானிப்பு போன்ற பல விடையங்களிற்கு இராவத்தினர் பயன்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

அவ்வாறென்றால் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உறுவாக்கப்பட்டிருக்கின்ற Multi Task Force படையமைப்பினரைக் கொண்டாவது இரானுவத்தினரின் நேரடி கண்கானிப்பின் மூலமாக மக்களுக்கு நிர்ணயித்த விலையில் பொருட்களைப் பெற்றுக்கொடுக்கின்ற நடவடிக்கையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உடனடியாக கரிசனை கொள்ள வேண்டும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post