யாழ். செம்மணி படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு - Yarl Voice யாழ். செம்மணி படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு - Yarl Voice

யாழ். செம்மணி படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்புயாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 25ஆவது ஆண்டு நினைவு தினம்  இன்றைய தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

வல்வெட்டித்துறையில் உள்ள தமிழ்த் தேசிய கட்சியின் அலுவலகத்தில் அதன் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் பிற்பகல் 3 மணியளவில் நினைவேந்தல் இடம்பெற்றது.

ஆயிரத்து 996ஆம் செப்ரெம்பர் மாதம் 7ஆம் திகதி யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருசாந்தி வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் அவரை சித்திரவதையின் பின் படுகொலை செய்ததாக நீதி விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post