யாழ் ஆரியகுளம் பகுதியில் வீடொன்றில் தீ பற்றியது - பெருமளவிலான பொருட்கள் எரிந்து நாசம் - Yarl Voice யாழ் ஆரியகுளம் பகுதியில் வீடொன்றில் தீ பற்றியது - பெருமளவிலான பொருட்கள் எரிந்து நாசம் - Yarl Voice

யாழ் ஆரியகுளம் பகுதியில் வீடொன்றில் தீ பற்றியது - பெருமளவிலான பொருட்கள் எரிந்து நாசம்யாழ்ப்பாணம் ஆரிய குளத்திற்கு அண்மையிலுள்ள வீடு ஒன்றில்  தீப்பற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில் 

இன்று காலை குறித்த வீட்டார் தமது அறையில் சாம்பிராணியை கொளுத்தி விட்டு வீட்டுக்கு வெளியே சென்றுள்ளனர்.

திடீரென வீட்டிற்கு தீப்பற்றி இருந்ததை அவதானித்த அயலவர்கள் உட்பட வீட்டார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து மாநகரசபை தீயணைக்கும் படை அறிவித்தனர்.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு மாநகரசபை தீயணைக்கும் படை விரைந்தது. குறிப்பிட்ட நேரத்தில் தீயணைக்கும் படையினரால் தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

 இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த பெறுமதியான பொருட்கள் பல நகைகளும் எரிந்ததாக வீட்டார் தெரிவித்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post