யாழில் ஒரு பகுதியை சுற்றிவளைத்து பொலிஸாரும் இராணுவமும் தேடுதல் - Yarl Voice யாழில் ஒரு பகுதியை சுற்றிவளைத்து பொலிஸாரும் இராணுவமும் தேடுதல் - Yarl Voice

யாழில் ஒரு பகுதியை சுற்றிவளைத்து பொலிஸாரும் இராணுவமும் தேடுதல்
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ  தலைமையில் இன்று அதிகாலை ராணுவம் மற்றும் பொலீசாரால் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டது 

யாழ்ப்பாண குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் அவ்விடங்களில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இன்று அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணிவரை நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவத்தினர்  மற்றும் பொலீசாரால் கொக்குவிலில்  ஒரு பகுதியானது சுற்றிவளைக்கப்பட்டு சந்தேகத்துக்கிடமான வீடுகளில்  தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது

 இன்று அதிகாலை திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்கு வேளைகளில் வாள் வெட்டு சம்பவங்கள் மற்றும் பமற்றும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி யுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0/Post a Comment/Comments

Previous Post Next Post