இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொடிய ‘நிபா’ வைரஸ் மீண்டும் தலையெடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிபா வைரஸ் மூளைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த வைரஸானது நேரடியாக வௌவால்கள், பன்றிகள் மூலம் மக்களுக்குப் பரவுகின்றது.
இந்தியாவில் சுமார் 20 பேருக்கு நிபா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் 12 வயது சிறுவன் ஒருவன் இத்தொற்றால் இறந்துள்ளான்.
பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்புள்ள 188 பேர் சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் கூறுகின்றன.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான முன்னுரிமை நோய்க் கிருமிகளின் பட்டியலில் எபோலா, ஜிகா, மெர்ஸ் மற்றும் லஸ்ஸா வைரஸ்களுடன் நிபா வைரஸும் சேர்க்கப்பட்டுள்ளது.
மூளைக் காய்ச்சலை ஏற்படுத்தும் இவ்வைரஸுக்கு இதுவரை தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment