யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.
சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 87 வயதான மனைவி கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு இன்று திங்கட்கிழமை மின் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 97வயதுடைய அவரது கணவரும் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Post a Comment