பிறந்து 10 நாட்களேயான பச்சிளங்குழந்தை உட்பட 14 பேருக்கு வடக்கில் கொரோனா! - Yarl Voice பிறந்து 10 நாட்களேயான பச்சிளங்குழந்தை உட்பட 14 பேருக்கு வடக்கில் கொரோனா! - Yarl Voice

பிறந்து 10 நாட்களேயான பச்சிளங்குழந்தை உட்பட 14 பேருக்கு வடக்கில் கொரோனா!பிறந்து 10 நாட்களேயான பச்சிளங்குழந்தை உட்பட வடக்கு மாகாணத்தில் 14 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 212 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த அறிக்கையின் அடிப்படையில்,

வவுனியா மாவட்டத்தில் 04 பேர் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள பிறந்து 10 நாட்களேயான பெண் குழந்தை ஒருவர் இருவர்,செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,

மன்னார் மாவட்டத்தில் 04
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 04 பேர்,முல்லைத்தீவு மாவட்டத்தில் 04 பேர்
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர்,
மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஒருவர்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவர்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,
யாழ்.மாவட்டத்தில் ஒருவர்
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post