சீனா இந்தியாவுடன் எல்லை யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அயல்நாடுகளிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது- ஆசிய அமெரிக்க செனெட்டர் - Yarl Voice சீனா இந்தியாவுடன் எல்லை யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அயல்நாடுகளிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது- ஆசிய அமெரிக்க செனெட்டர் - Yarl Voice

சீனா இந்தியாவுடன் எல்லை யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அயல்நாடுகளிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது- ஆசிய அமெரிக்க செனெட்டர்
சீனா இந்தியாவுடன் எல்லை யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அயல்நாடுகளிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது என அமெரிக்காவின் குடியரசு கட்சி செனெட்டர் ஜோன் கொர்னைன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செனெட்டிற்கு இதனை தெரிவித்துள்ள அவர்புதுடில்லிக்கும் தென்னாசிய நாடுகளிற்கான தனது விஜயம் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.

பிராந்தியம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் குறித்து அறிவதற்காக இந்த விஜயத்தை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கு அருகில் உள்ள நாடுகள் உடனடி மோசமான ஆபத்தை எதிர்கொண்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

எனக்கு தென்னாசியாவிற்கு அமெரிக்க காங்கிரஸ் குழுவொன்று விஜயம் மேற்கொண்டது நான் அதற்கு தலைமை தாங்கினேன் பிராந்தியம் எதிர்கொண்டுள்ள சவால்களை அச்சுறுத்தல்களை அறிந்து கொள்வதற்காக இந்த விஜயத்தை முன்னெடுத்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

சீனா சர்வதேச கடற்பரப்பில் கடற்பயணத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது.அது தனது மக்களிற்கு எதிராக மோசமா மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றது என தெரிவித்துள்ள அவர் உய்குர் முஸ்லீம்களிற்கு எதிராக சீன மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றது என தெரிவித்துள்ளார்.

சீனா இந்தியாவுடன் எல்லை போரில் ஈடுபட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் தாய்வானிற்குள் ஊருடுவப்போவதாக மிரட்டுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு பிரதமர் மற்றும் அமைச்சர்களை சந்தித்தோம் என தெரிவித்துள்ள கொர்னைன் சீனாவினால் உருவாகியுள்ள அச்சுறுத்தல் மற்றும் ஏனைய முன்னுரிமைக்குரிய விடயங்கள் குறித்தும் ஆராய்ந்தோம் என தெரிவித்துள்ளார்.

பான்கொங் ஏரியின் பகுதியில் கடந்த வருடம் ஐந்தாம் திகதி மூண்ட மோதலின் பின்னர் இரு தரப்பினரும் தங்கள் ஆயிரக்கணக்கான படையினரையும் கனரக ஆயுதங்களையும் எல்லையில் நிறுத்தியுள்ளனர்.

தொடர்ச்சியான இராணுவஅரசியல் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இரு தரப்பும் படையினரை எல்லையிலிருந்து குறிப்பிடத்தக்க அளவிற்கு மீளபெற்றுள்ளன. 

ஆகஸ்ட் மாதம் கொக்ரா பகுதியிலிருந்தும் பான்கொங் ஏரியின் தென் மற்றும் வடபகுதியிலிருந்து பெப்ரவரியிலும் படைகளை வாபஸ்பெற்றன.

லடாக்கின் கிழக்கு பகுதியில் காணப்படும் முறுகல் நிலைக்கு தீர்வை காண்பதற்காக ஒக்டோபர் 10ம் திகதி இடம்பெற்ற இராணுவ பேச்சுவார்த்தைகளில் இருதரப்பும் முன்னேற்றத்தை காண தவறியுள்ளன.

இதேவேளை பிலிப்பைன்சிற்கான விஜயத்தின்போது சர்ச்சைகுரிய கடற்பகுதியில் கடற்கரை விமானம் மூலம் சென்றதாக அமெரிக்க செனெட்டர் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்சின் வான்பரப்பிலிருந்து புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் சீனாவின் வேவு கப்பலொன்று பிலிப்பைன்சை வேவு பார்ப்பதை தாங்கள் பார்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் விஜயத்தின் முக்கியமாக இடம்பெற்ற விடயம் என்னவென்றால் தாய்வான் மீது சீனா போர் தொடு;ப்பதற்கான கால அட்டவணை என அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து விதங்களிலும் சீனாவிற்கு எதிர்மாறானதாக தாய்வான் காணப்படுகி;ன்றது அது உண்மையான ஜனநாயக நாடு – அங்கு முடிவுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்படாத தேர்தல்கள் இடம்பெறுகின்றன என அமெரிக்க செனெட்டர் தெரிவித்துள்ளார்.

தாய்வான் திறந்த சந்தை பொருளாதார நாடு அது சட்டத்தின் ஆட்சியை பின்பற்றுகின்றது அமெரிக்காவில் நாங்கள் பின்பற்றும் கருத்துசுதந்திரம் - ஊடக சுதந்திரம் மத மற்றும் ஒன்றுகூடுவதற்கான விழுமியங்களை தாய்வான் பின்பற்றுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post