முல்லைத்தீவில் மாவீரர் வாரத்தினை முன்னெடுக்க 12 பேருக்குத் தடை! - Yarl Voice முல்லைத்தீவில் மாவீரர் வாரத்தினை முன்னெடுக்க 12 பேருக்குத் தடை! - Yarl Voice

முல்லைத்தீவில் மாவீரர் வாரத்தினை முன்னெடுக்க 12 பேருக்குத் தடை!முல்லைத்தீவில் மாவீரர் வாரத்தினைக் கடைப்பிடிப்பதற்கு 12 பேருக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மாவீரர் வாரத்தினை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கக் கோரி பொலிஸார் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனுவை விசாரித்த நீதிபதி பிரமுகர்கள் 12 பேருக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், து.ரவிகரன், பீற்றர் இளஞ்செழியன், த.யோகேஸ்வரன் உட்பட்டவர்களுக்கே குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த தடை உத்தரவுப் பத்திரங்கள் நாளை குறித்த பிரமுகர்களுக்கு கையளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post