வடமராட்சியில் 15க்கும் அதிக படகுகள் கரை திரும்பவில்லை; உறவினர்கள் கவலை - Yarl Voice வடமராட்சியில் 15க்கும் அதிக படகுகள் கரை திரும்பவில்லை; உறவினர்கள் கவலை - Yarl Voice

வடமராட்சியில் 15க்கும் அதிக படகுகள் கரை திரும்பவில்லை; உறவினர்கள் கவலை



வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக 15க்கும் அதிக படகுகளில் சென்ற 45க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பாதது குறித்து உறவினர்கள் கவரை வெளியிட்டுள்ளனர். 

வடக்கில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வடமராட்சியின் கடற்பரப்பும் கடும் காற்றுடன் கொந்தளிப்பான நிலையில் உள்ளது. 

இன்று அதிகாலை மீன்பிடிக்க பருத்தித்துறை, முனை உட்பட்ட பகுதிகளிலிருந்து 15 படகுகளில் சென்ற 45க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று நண்பகல் வரை கரை திரும்பவில்லை என கவலை தெரிவித்துள்ள மீனவர்களின் உறவினர்கள் கடற்கரைகளில் அவர்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

வழக்கமாக காலை 8.00 மணியளவில் மீனவர்கள் கரை திரும்புவர் என்றும் கடல் கொந்தளிப்பாக இருப்பதால் அச்சமாக உள்ளதாகவும் மீனவர்களின் உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post