பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது, இரு கொவிட் தடுப்பூசிகளையும் பெறாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமென சட்ட மாஅதிபர் அறிவித்துள்ளார் என்றும் அதனை அமுல்படுத்த எதிர்பார்ப்பதாகவும் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பொது இடங்களில் பயணம் செய்பவர்கள் இரண்டு கொவிட் தடுப் பூசிகளும் செலுத்தியுள்ள மையை உறுதிப்படுத்தும் வகையில் தடுப்பூசி அட்டையை எடுத்துச் செல்வது கட்டாயமாக்குவதற்கு சட்டமா அதிபர் தமக்கு அறிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய இயலுமை காணப்படுவதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளாமல் பொது இடங்களுக் குச் செல்பவர்களுக்கு எதிராக இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இந்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு எதிர்பார்த்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
அதன்படி பொது மக்கள் பொது இடங்களில் பிரவேசிக்கும் போது தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்கும் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக யாராவது நீதிமன்றத்துக்குச் சென்றால் அதனையும் எதிர்கொள்ளத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment