5 கோடி மதிப்பிலான வாட்சுகள் பறிமுதல்: ஹர்திக் பாண்ட்யா விளக்கம் - Yarl Voice 5 கோடி மதிப்பிலான வாட்சுகள் பறிமுதல்: ஹர்திக் பாண்ட்யா விளக்கம் - Yarl Voice

5 கோடி மதிப்பிலான வாட்சுகள் பறிமுதல்: ஹர்திக் பாண்ட்யா விளக்கம்



7 வது இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 17 ந்தேதி தொடங்கியது. 

 இதில் இந்திய அணியும் பங்கேற்றது.  இந்திய அணி சார்பில் விளையாடிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது ‘ஷாட் பிட்ச்’ பந்து ஒன்று தோள்பட்டையில் தாக்கியது.

  இதனால் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.  தொடர்ந்து போட்டியில் பங்கேற்பதில் தடை ஏற்பட்டது.
இந்த நிலையில், உலக கோப்பை போட்டிகள் நிறைவடைந்தன. 

 இதனால், துபாயில் இருந்து பாண்ட்யா நாடு திரும்பினார்.  அவரிடம் மும்பை சுங்க இலாகா அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டதில், பணம் செலுத்தியதற்கான உரிய ரசீதுகள் எதுவுமில்லாத 2 வாட்சுகள் இருந்ததாகவும் , ரூ.5 கோடி மதிப்புள்ள அவற்றை அதிகாரிகள்  பறிமுதல் செய்து உள்ளதாகவும்  தகவல் வெளியானது.

இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா தரப்பில் அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது . பாண்ட்யா ட்விட்டரில்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :

நான் துபாயில் இருந்து சட்டப்பூர்வமாக வாங்கிய அனைத்து பொருட்களையும்  தானாக முன்வந்து அதிகாரிகளிடம் தெரிவித்தேன்.நான் செலுத்த வேண்டிய தொகையை  செலுத்த தயாராக இருந்தேன்.நான் எவ்வளவு தொகை  செலுத்த வேண்டுமோ அதற்கான மதிப்பீட்டை சுங்க இலாகா அதிகாரிகள் மேற்கொள்கின்றனர் .அதை நான் செலுத்துவதை ஏற்கனவே உறுதி செய்துள்ளேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post