ஏ-9 வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவித்தல் - Yarl Voice ஏ-9 வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவித்தல் - Yarl Voice

ஏ-9 வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவித்தல்
வட மாகாணத்துக்கான ஏ-9 பிரதான வீதியின் இரு புறங்களிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் வடமாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கார விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

அதன்படி, வன்னி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்கள் மற்றும் பிரிவுகளில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உதவியுடன் பொருத்தமான வாகனத் தரிப்பிடங்களை இனங்கண்டு, இது தொடர்பில் வாகனச் சாரதிகளுக்கு அறிவிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற வாகன நிறுத்துமிடங்களில் 'No Parking' பலகைகளை வைக்குமாறும், பணி முடியும் வரை வாகன சாரதிகளுக்கு இடையூறு விளைவிக்காமல், சம்பந்தப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து காவலர்களை பணியில் அமர்த்துமாறும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் (டிஐஜி) அறிவுறுத்தியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post