கொரோனா: ஐரோப்பாவில் மேலும் 7 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்...!! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை - Yarl Voice கொரோனா: ஐரோப்பாவில் மேலும் 7 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்...!! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை - Yarl Voice

கொரோனா: ஐரோப்பாவில் மேலும் 7 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்...!! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை



கொரோனா அதிகரிப்பால் ஐரோப்பாவில் மேலும் 7 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் கொரோனா மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது.

 நாளொன்றுக்கு சுமார் 4,200 பேர் வரை கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். இது கடந்த செப்டம்பர் இறுதி நிலையை ஒப்பிடுகையில் இது இருமடங்கு ஆகும்.

இந்த நிலைமை நீடித்தால் அடுத்த ஆண்டு வசந்த காலத்துக்கு முன் (மார்ச்-ஜூன்) ஐரோப்பாவில் 7 லட்சம் பேர் வரை உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாகவும், இதன் மூலம் அங்கு மொத்த பலி எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்து விடும் எனவும் உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய கிளை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் பிராந்திய இயக்குனர் டாக்டர் க்ளூக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா பகுதிகளில் கொரோனாவின் இன்றைய நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது.

 எனவே நோய் எதிர்ப்பு திறன் குறைந்தவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகுந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post