பருத்தித்துறை மாவீரா் தின ஏற்பாடுகளிலும் படையினரால் அச்சுறுத்தல் - Yarl Voice பருத்தித்துறை மாவீரா் தின ஏற்பாடுகளிலும் படையினரால் அச்சுறுத்தல் - Yarl Voice

பருத்தித்துறை மாவீரா் தின ஏற்பாடுகளிலும் படையினரால் அச்சுறுத்தல்பருத்தித்துறை முனைப்பகுதியில் கடந்த வருடங்களில் மாவீரா் தின நினைவேந்தல் நடைபெற்ற இடத்தில் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் சிரமதானப் பணிகள் நடைபெற்றது. அதன்போது அப்பகுதியில் பெருமளவு இராணுவத்தினா் மற்றும் புலனாய்வாளா்கள் குவிக்கப்பட்டிருந்தனா்.

அவா்கள் அங்கு சிரமதானத்தில் ஈடுபட்டிருந்தவா்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியும், வாகன இலக்கங்களையும் பதிவு செய்துள்ளனா்.

 அத்துடன் சிரமதானம் முடிந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளா்கள் தத்தமது வாகனங்களில் திரும்பிய வேளையில் மோட்டாா்சைக்கிள்கள் மற்றும் வாகனங்களில் படையினா் மற்றும் புலனாய்வாளா்கள் பின்தொடா்ந்து வந்தும் அச்சுறுத்தியுள்ளனா்.

இச்சிரமதானத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினா் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டிபன் மற்றும் செயற்பாட்டாளா்கள் கலந்துகொண்டனா்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post