தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் யாழில் ஆரம்பம் - Yarl Voice தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் யாழில் ஆரம்பம் - Yarl Voice

தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் யாழில் ஆரம்பம்



தமிழ் தேசிய கட்சிகளின் கூட்டம் தற்போது யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது.

தமிழ்த் பேசும் மக்களின்  தலைவர்களின் கலந்துரையாடல்  யாழிலுள்ள விடுதியொன்றில் இன்று காலை ஆரம்பமாகியது. 

  13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக, அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே, நடைமுறைப்படுத்துவதற்கு  இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடல் 2ம் திகதி நவம்பர்  யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் ஏற்கனவே தீர்மானிக்க பட்டதன் பிரகாரம் ஆரம்பித்துள்ளது.
 
 தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,  ஜனநாய மக்கள் விடுதலை முன்னணியின்( புளட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், 
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் 
 ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,  தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் சார்பில் பேராசிரியர் சிவநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான  குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.







0/Post a Comment/Comments

Previous Post Next Post