அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்களும் இணைந்து எதிர்வரும் 09 ஆம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) தெரிவித்துள்ளது.
பிற்பகல் 2.00 மணிக்கு லிப்டன் சுற்றுவட்டத்தில் போராட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்க்கப்படுவதாக சங்கத்தின் பொதுச் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
எதிர்வரும் செவ்வாய்கிழமை அனைத்து தொழிற்சங்க தலைவர்களின் பங்கேற்புடன் இது முன்னெடுக்கப்படவுள்ளது.
அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வுக்கோரி இத்தொழிற்சங்க நடவடிக்கையானது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Post a Comment