இலங்கை உட்பட பல நாடுகளில் சீனா இராணுவதளங்களைஉருவாக்குவதற்கு முயல்கின்றது என பென்டகன் தெரிவித்துள்ளமைக்கு பதிலடி கொடுத்துள்ள சீன ஒரு திருடன் அனைவரும் திருடுகிறார்கள் என நினைப்பான் என தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான சீன தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
இலங்கையில் சீனா இராணுவதளமொன்றை உருவாக்க முயல்கின்றது என பென்டகன் அச்சம் வெளியிட் டுள்ளது
சீனா இலங்கை, பாகிஸ்தான், மியன்மார் உட்பட பல நாடுகளில் தனது இராணுவத்திற்கான தளத்தை உருவாக்க முயல்கின்றது என பென்டகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தனது கடற்படை வான் மற்றும் தரைப் படையினரின் எதிர்கால திட்டங்களை அடிப்படையாக வைத்தே சீனா இந்தத் தளங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது என பென்டகன் தெரிவித்துள்ளது.
நமீபியாவில் சீனா தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது என தெரிவித்துள்ள பென்டகன் சீனா முதல் ஹர்முஸ் ஜலசந்தி வரை- ஆபிரிக்கா முதல் பசுபிக் தீவுகள் வரை சீனா கவனம் செலுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.
பல நாடுகளின் பல இடங்களைத் தேடிச்செல்வதே சீன இராணுவத்தின் நோக்கம்.ஆனால் சில நாடுகள் மாத்திரம் உட்கட்டமைப்பு வசதி -படையினரின் நிலை- படையினர் வருகை தரும் உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தை களுக்கும் அல்லது தளங்கள் குறித்த பேச்சுவார்த்தை களுக்கும் தயாராக உள்ளன என பென்டகன் தெரிவித்துள்ளது
Post a Comment