'சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டேன்; நான் நன்றாக இருக்கிறேன்' - ரஜினிகாந்த் - Yarl Voice 'சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டேன்; நான் நன்றாக இருக்கிறேன்' - ரஜினிகாந்த் - Yarl Voice

'சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டேன்; நான் நன்றாக இருக்கிறேன்' - ரஜினிகாந்த்சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபின்பு நலமுடன் இருப்பதாக ஆடியோ வெளியிட்டுள்ளார்.

தலைசுற்றல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28ஆம் தேதி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் உடல் பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரஜினிகாந்தின் குடும்பத்தினர் விளக்கம் அளித்தனர்.

29ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ரஜினிகாந்துக்கு கழுத்தில் இருந்து மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் இருந்த அடைப்பை நீக்கி, ரத்த ஓட்டத்தை சீராக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. மேலும், ரஜினிகாந்தின் உடல்நிலை சீராகி வருவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது. இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் ரஜினிகாந்த் நலம்பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். போயஸ் கார்டன் வீடு வந்த அவருக்கு, குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியபின்பு,  சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும் தாம் நலமுடன் இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ பதிவு வெளியிட்டுள்ளார். தனது ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி, தனது நலன் பற்றி விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி என அவர் அந்த ஆடியோ பதிவில் தெரிவித்திருக்கிறார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post