மாவீரர் தினத்திற்கு தடைகோரி பொலிஸார் தொடுத்த வழக்கு மல்லாகம் நீதிமன்றிலும் தள்ளுபடி - Yarl Voice மாவீரர் தினத்திற்கு தடைகோரி பொலிஸார் தொடுத்த வழக்கு மல்லாகம் நீதிமன்றிலும் தள்ளுபடி - Yarl Voice

மாவீரர் தினத்திற்கு தடைகோரி பொலிஸார் தொடுத்த வழக்கு மல்லாகம் நீதிமன்றிலும் தள்ளுபடி
மாவீரர் தினத்துக்கு தடைகோரி எட்டு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் இணைந்து மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

 தமிழீழ விடுதலைப் புலிகளின் இறந்த நபர்களை நினைவு கூறுகின்ற மாவீரர் நாள் நிகழ்வினை அனுஷ்டிக்கவும் தற்போது நாட்டில் காணப்படும் கொரோனாத் தொற்றுப் பரவலை கவனத்திற் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மல்லாகம் நீதிமன்றத்தில் பொலிசாரால் இன்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த மல்லாகம் நீதிமன்ற நீதவான் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பிரதிவாதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் ஆலய மதகுருமார்கள் காணப்பட்டனர்.

குறித்த வழக்கில் பிரதிவாதிகள் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி என்.சிறிக்காந்தா, சட்டத்தரணிகளான வி.மணிவண்ணன், வி.திருக்குமரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post