திடீர் பணிபுறக்கணிப்பு - மின்சார சபை தொழிற் சங்கங்கள் எச்சரிக்கை - Yarl Voice திடீர் பணிபுறக்கணிப்பு - மின்சார சபை தொழிற் சங்கங்கள் எச்சரிக்கை - Yarl Voice

திடீர் பணிபுறக்கணிப்பு - மின்சார சபை தொழிற் சங்கங்கள் எச்சரிக்கை
யுகதனவி மின் நிலையத்தின், அரசுக்கு உரித்தான பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
குறித்த தகவலை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எவருக்கும் தெரியாத இந்த உடன்படிக்கையை அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்தாவிட்டால், பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஒன்றியத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளதாக ஏற்கனவே அறியப்படுத்தப்பட்டுள்ளது.பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டால். பொதுமக்கள் அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிடும்.

இருந்தபோதிலும் முன்னறிவித்தலின்றி பணிப்புறக்கணிப்புக்கு செல்லத் தயாரில்லை என ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post