வரிசையில் நிற்க வைத்து.. சாப்பாடு பரிமாறிய ஸ்டாலின் - Yarl Voice வரிசையில் நிற்க வைத்து.. சாப்பாடு பரிமாறிய ஸ்டாலின் - Yarl Voice

வரிசையில் நிற்க வைத்து.. சாப்பாடு பரிமாறிய ஸ்டாலின்




தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வரும் நவம்பர் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்பதால் அடுத்த ஐந்து நாட்களுக்குத் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என சென்னை மானிலை ஆய்வு மையத் தெரிவித்திருந்தது.

இதையடுத்து நேற்று இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளம் சூழ்ந்துள்ள இடங்களை ஆய்வு செய்து வருகிறார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார்

செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளதால் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

எழும்பூர், வடசென்னை என்று 11 இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு பணிகளை செய்து வருகிறார்.

இதையடுத்து களத்தில் ஆய்வு பணிகள் மட்டுமின்றி நிவாரண பொருட்கள் வழங்கும் பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டார்.

 எழும்பூரிலும், வடசென்னையின் சில பகுதிகளிலும் முதல்வர் ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார். போர்வை, பிஸ்கட், பிரெட் அடங்கிய உணவு பொருட்கள் பொட்டலம், மாஸ்க் ஆகியவற்றை மக்களுக்கு வழங்கினார்.

அதன்பின் வடசென்னையின் பாபா நகர், ஜிகேஎம் நகர், ஜவஹர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அதன்பின் அங்கு அரசு சார்பாக தயாரிக்கப்பட்டு இருந்த அன்னதான உணவுகளை முதல்வர் ஸ்டாலின் தனது கைப்பட மக்களுக்கு வழங்கினார்.

 மக்களை வரிசையில் நிற்க வைத்து அவர்களுக்கு முதல்வரே நேரடியாக உணவு பரிமாறினார்
வரிசையில் நின்ற மக்கள் பலரிடம் முதல்வர் நலம் விசாரித்து கனிவாக பேசினார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

 சென்னையில் மழை, வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தாழ்வான பகுதிகளில் முதலில் களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

அங்கு மக்களை மீட்க வேண்டும். வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post