பந்தை எறிந்து காயப்படுத்திய பாகிஸ்தான் வீரர் ஷகீன் ஷா அப்ரிடிக்கு அபராதம் - Yarl Voice பந்தை எறிந்து காயப்படுத்திய பாகிஸ்தான் வீரர் ஷகீன் ஷா அப்ரிடிக்கு அபராதம் - Yarl Voice

பந்தை எறிந்து காயப்படுத்திய பாகிஸ்தான் வீரர் ஷகீன் ஷா அப்ரிடிக்கு அபராதம்வங்காளதேச அணி பேட்ஸ்மேனின் காலில் வேண்டுமென்றே பந்தை எறிந்து காயப்படுத்திய பாகிஸ்தான் வீரர் ஷகீன் ஷா அப்ரிடிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான்  வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து டாக்காவில் நேற்று முன்தினம் நடந்த 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது அந்த வங்காளதேச அணியின் பேட்ஸ்மேன் அபிப் ஹூசைன் மீது வேண்டுமென்றே பந்தை எறிந்து காலில் காயத்தை ஏற்படுத்திய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. முந்தைய பந்தில் அபிப் சிக்சர் அடித்ததால் கோபத்தை அப்ரிடி இந்த வகையில் வெளிப்படுத்தி நடவடிக்கையில் சிக்கி இருக்கிறார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post