அமெரிக்க ஜனாதிபதி பாக்கிஸ்தானை ஏன் புறக்கணிக்கின்றார் - முன்னாள் அமைச்சர் - Yarl Voice அமெரிக்க ஜனாதிபதி பாக்கிஸ்தானை ஏன் புறக்கணிக்கின்றார் - முன்னாள் அமைச்சர் - Yarl Voice

அமெரிக்க ஜனாதிபதி பாக்கிஸ்தானை ஏன் புறக்கணிக்கின்றார் - முன்னாள் அமைச்சர்
அமெரிக்க ஜனாதிபதி பாக்கிஸ்தானுடன் சிறந்த உறவுகளை பேணாதமைக்கு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது பாக்கிஸ்தான் செயற்பட்டவிதமே காரணம் என பாக்கிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது பாக்கிஸ்தான் வர்த்தகர்ஒருவர் அமெரிக்காவில் உள்ள பாக்கிஸ்தான் தூதரகத்தை டிரம்பின் தேர்தல் அலுவலகமாக பயன்படுத்தினார் என முன்னாள் அமைச்சர் த நியுசிற்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பைடனிற்கு இது குறித்து தெரியவந்தவேளை அவர் கடும் அதிருப்தியடைந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாக்கிஸ்தான் பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் தங்கள் நிலைப்பாட்டை விளக்கி அமெரிக்கஜனாதிபதிக்கு கடிதம் எழுதவேண்டும் என தெரிவித்துள்ள அவர் பாக்கிஸ்தான் தூதரகத்தை பயன்படுத்திய வர்த்தகர் யார் என்பது குறித்த விசாரணை அவசியம் எனவும் குறி;ப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கும் பாக்கிஸ்தானிற்கும் இடையிலான கசப்புணர்வு இன்னமும் நீடிக்கின்றது இல்லாவிட்டால் அமெரிக்க ஜனாதிபதி இம்ரான்கானை தொடர்புகொண்டிருப்பார் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்கூட்டியே காபுலை கைப்பற்றுமாறு பாக்கிஸ்தான் தலிபானை தூண்டியது என்பது பிழையான இந்திய பிரச்சாரம் என அவர் தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் நெருங்கி வந்ததும் எப்படி அவர்களை தடுக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் ஆப்கான் படையினர் அவர்களை வரவேற்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கான் ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் அனைவரும் தப்பியோடிவிட்டனர் இறுதிவரை எதிர்ப்போம்என தெரிவித்த அவரது துணைஜனாதிபதியும் தப்பிச்சென்றுவிட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க படையினர் அவசரமாக வெளியேறியமைதலிபான் காபுலிற்குள் நுழைந்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வழிகோலியது என அவர்தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post