வாசு, விமல், உதய மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன்- சாகர - Yarl Voice வாசு, விமல், உதய மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன்- சாகர - Yarl Voice

வாசு, விமல், உதய மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன்- சாகரஅமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறிச் செயற்பட்டு வரும் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில் ஆகியோர்  தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கட்சி என்ற வகையில், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செய லாளரான பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் லங்கா தீபவுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தரப்பினரின் செயற்பாடுகள், நடத்தைகள் என்பன அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைக்கு பாரிய அச்சுறுத்தல் மற்றும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், இந்தக் கோரிக்கையை விடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுகதனவி மின் உற்பத்தி நிலையம் சம்பந்தமான  உடன்படிக்கை இன்னும் கைச்சாத்திடப்படவில்லை என்பதால், அது குறித்து எந்த வகையிலும் குழப்பமடைய வேண்டாம் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆளும் கட்சியின் தலைவர்களின் கூட்டத்தில் தெளிவாகக் கூறியுள்ளார் என்றும்  இவ்வாறான பின்னணியில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இந்தத் தரப்பினர் அடிப்படையின்றி அரசாங்கத்தை விமர்சித்து வருவது மிகவும் கீழ்த்தரமான செயல் என்றும் இது வெளியிலிருந்து மேற்கொள்ளப்படும் ஏதோ ஒரு சூழ்ச்சிக்கு அமைய நடக்கின்றதோ என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post