யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் சேவை நாளை (03.11.2021) புதன்கிழமை மாலை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி நாளை புதன்கிழமை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புகையிரம் மாலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணம் நோக்கி புறப்படும்.
மறுநாள் வியாழக்கிழமை காலை 6.35 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து இருந்து கொழும்பு நோக்கிய புகையிரத சேவை புறப்படும்.
எனினும் மறுஅறிவித்தல் வரை யாழில் இருந்து கொழும்பிற்கு ஒரு சேவையும் கொழும்பில் இருந்து யாழிற்கு ஒரு சேவையுமாக சாதாரண ரயில் சேவையே இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment