எமக்கு வாக்களித்த மக்கள் தற்போது மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர் - பிரதமர் மகிந்த - Yarl Voice எமக்கு வாக்களித்த மக்கள் தற்போது மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர் - பிரதமர் மகிந்த - Yarl Voice

எமக்கு வாக்களித்த மக்கள் தற்போது மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர் - பிரதமர் மகிந்த



தமிழ், முஸ்லிம் இனத்தவர்களை நெருக்கமாக்கிக் கொள்ள முடியுமாயின் அதுவே பொதுஜன பெரமுனவினால் செய்யக்கூடிய சிறந்த செயல்-பிரதமர்

இக்கட்டான சூழ்நிலைகளில் ஒரே நோக்கத்துடன் போராடிய கட்சிகள் பெரிதாயினும், சிறிதாயினும் இதிலிருந்து எம்மை பிரிக்க முடியாது. அவர்கள் எமது ஆதரவாளர்கள் இல்லை. அவர்கள் நம் கைக்கூலிகள் இல்லை.

 எனவே அன்றிருந்த அனைத்து கட்சிகளும் எப்போது இணைந்திருக்க வேண்டும் - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ

• சுவரில் ஓவியங்கள் வரைந்த இளைஞர்கள் இன்று நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கடவுச்சீட்டு பெறுவதற்கான வரிசையில் நிற்பார்களாயின் அவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் இந்நாட்டுக்கு அழைத்துவரும் வகையிலான அரசியலில் ஈடுபடுங்கள்.

• மக்களின் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடிய அரசியலை பொதுஜன பெரமுனவினால் முன்னெடுக்கவும்.

• அன்று எம்மை சிறையிலடைத்தாலும் மக்களை குழப்பி போராட்டங்களை செயற்படுத்தி மக்களை இருளில் மூழ்க வைக்க நாம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

• ஒரு கட்சியின் புகழும், நற்பெயரும் பாதுகாக்கப்படுவது ஆட்சி அதிகாரத்தினால் அல்ல.
 ஆட்சியிலிருக்கும் போதும் மக்கள் மத்தியில் அரசியல் செய்ய வேண்டும்.

• எமக்கு வாக்களித்த மக்கள் தற்போது மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

• காப்பாற்றிய நாட்டை நாம் காட்டிக்கொடுக்க மாட்டோம். 
• தமிழ், முஸ்லிம் இனத்தவர்களை நெருக்கமாக்கிக் கொள்ள முடியுமாயின் அதுவே பொதுஜன பெரமுனவினால் செய்யக்கூடிய சிறந்த செயல்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post