சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒரேயொரு தமிழ் அரசியல் கைதியை சந்தித்த முன்னணி எம்பிக்கள் - Yarl Voice சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒரேயொரு தமிழ் அரசியல் கைதியை சந்தித்த முன்னணி எம்பிக்கள் - Yarl Voice

சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒரேயொரு தமிழ் அரசியல் கைதியை சந்தித்த முன்னணி எம்பிக்கள்


மாத்தறை சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒரேயொரு தமிழ் அரசியல் கைதி- தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர்.

மாத்தறை சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒரேயொரு தமிழரான வவுனியாவை சேர்ந்த தங்கவேல் நிமலன் என்பவர் பயங்கரவாத தடைச்சட்ட வழக்குகளில் உள்ளவர்களுடன் தன்னையும் சேர்த்துக்கொள்ளுமாறு அவசர வேண்டுகோளை விடுத்துள்ளார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

மாத்தறை சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு தங்கவேல் நிமலனை சந்தித்த பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள வவுனியாவை சேர்ந்த தங்கவேல் நிமலன் என்பவரை மாத்தறை சிறைச்சாலைக்கு சென்று சந்தித்தோம்.

அவர் சார்ந்த வழக்கிலே மூன்று சந்தேகநபர்கள் இருக்கின்ற நிலையில் அவரை மாத்திரம் தனிமைப்படுத்தி மாத்தறை சிறைச்சாலையிலே வைத்திருக்கின்றார்கள்.
ஏனைய இருவரும் கொழும்பிலே மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்

அவர் தனிதமிழ்நபராக இங்கு வைக்கப்பட்டுள்ளார், அவருடைய மொழிசார்ந்த வசதிகளும் மிகவும் குறைவாக இருக்கின்றது, அவர் ஏனைய பயங்கரவாத தடைச்சட்ட வழக்குகளில் உள்ளவர்களுடன் தன்னையும் சேர்த்துக்கொள்ளுமாறு அவசர வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அந்த வகையிலே அது சம்பந்தமாக அமைச்சர் அலி சப்ரி அவர்களோடு இந்த விடயத்தை பேசுவோம் என நாங்கள் அவரிடம் தெரிவித்திருந்தோம்.

தற்போது அவருக்கு நாங்கள் தெரிவித்திருக்கின்ற விடயம் என்னவென்றால் கைதிகளை விடுவிப்பதற்கான அழுத்தங்களை நாங்கள் தொடர்ந்தும் கொடுப்போம்.

 ,ஆனால் அதேவேளை  அது நிறைவேறும் வரைக்கும் கைதிகளை தங்கள் சொந்த ஊருக்கு கிட்ட இருக்கின்ற சிறைச்சாலைகளிற்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றோம்,

இந்த விடயங்களை தொடர்ச்சியாக வரவு செலவுதிட்ட விவாத காலத்தில் கூட உரிய அமைச்சுகளிற்கு வரக்கூடிய சந்தர்ப்பங்களை பயன்படுத்தி வலியுறுத்துவோம் என்பதையும் நாங்கள் அவருக்கு தெரிவித்தோம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post