கொரோனா பரிசோதனைகள் இரு நாட்களுக்கு இடைநிறுத்தம் - Yarl Voice கொரோனா பரிசோதனைகள் இரு நாட்களுக்கு இடைநிறுத்தம் - Yarl Voice

கொரோனா பரிசோதனைகள் இரு நாட்களுக்கு இடைநிறுத்தம்கொரோனா பரிசோதனைகள் இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்தப்படும் எனத் தெரியவந்துள்ளது.

சுகாதாரத்துறை தொழில் வல்லுனர்கள் சம்மேளனத்தின் சுகாதார சேவையாளர்கள் இன்று காலை முதல் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கொரோனா தொற்றாளர் களுக்கு பீசிஆர் மற்றும் துரித அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரியவந்துள்ளது.

சம்பளம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன் வைத்து இன்று காலை 7 மணி முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post