அரசியல் பலத்தையும் படைகளின் ஆதிக்கத்தையும் ஒன்றுதிரட்டி இலங்கையை சிங்கள பௌத்த நாடு என நிறுவுவதற்கு அரசாங்கம் முயற்சி - சிறிதரன் - Yarl Voice அரசியல் பலத்தையும் படைகளின் ஆதிக்கத்தையும் ஒன்றுதிரட்டி இலங்கையை சிங்கள பௌத்த நாடு என நிறுவுவதற்கு அரசாங்கம் முயற்சி - சிறிதரன் - Yarl Voice

அரசியல் பலத்தையும் படைகளின் ஆதிக்கத்தையும் ஒன்றுதிரட்டி இலங்கையை சிங்கள பௌத்த நாடு என நிறுவுவதற்கு அரசாங்கம் முயற்சி - சிறிதரன்



அரசாங்கம் தனது அரசியல் பலத்தையும் படைகளின் ஆதிக்கத்தையும் ஒன்றுதிரட்டி, இலங்கையை சிங்கள பௌத்த நாடு என நிறுவுவதற்கான முயற்சி செய்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

அதன்பிரகாரம் தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்களில் பௌத்த சிதைவுகள் இருப்பதாகக்கூறி முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வாராய்வுகள் இதற்கு முக்கிய சான்று என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெடுக்குநாறி மலையில், காரைநகர் பகுதி என வடக்கு கிழக்கில் பல பகுதிகளிலும் பௌத்த சின்னங்களும் சிதைவுகளும் இருப்பதாகக்கூறி தொல்பொருள் திணைக்களத்தினால் அகழ்வாராய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேநேரம் கடந்த காலங்களில் வரலாற்றாசிரியர்களாலும் தொல்லியலாளர்களாலும் நாட்டின் தென்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று ரீதியான ஆய்வுகள் மற்றும் அகழ்வாராய்வுக்குச் சமளவிலான ஆய்வுகள் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் சிறிதரன் சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்கள் குறித்த தொல்லியல் சான்றுகளையும் ஆதாரங்களையும் கருத்துக்களையும் வெளியிடுவதற்குப் பலரும் தயங்கும் நிலையில் இவ்விடயங்கள் குறித்தும் கரிசனை கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post